இத்தாலியைச் சேர்ந்த பிரபல கார் நிறுவனமான ஃபெராரி, முன்னணி மின்னணு நிறுவனமான சாம்சங் உடன் கூட்டணியில் களமிறங்கி உள்ளது. ஃபெராரி கார்களில், ஓஎல்இடி டிஸ்ப்ளே பேனல்களை பொருத்துவதற்கான ஒப்பந்தத்தில் இரு நிறுவனங்களும் கையெழுத்திட்டுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஃபெராரி நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டாளர் பெனிதத்தோ விக்னா தெரிவித்துள்ளார்.
வரும் 2025 ஆம் ஆண்டு, ஃபெராரி, தனது முதல் மின்சார காரை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த மின்சார கார் மற்றும் இனிமேல் வெளியாகயுள்ள ஃபெராரி நிறுவனத்தின் இதர கார்களின் ஓஎல்இடி டிஸ்ப்ளேக்களை, சாம்சங் தயாரிக்க உள்ளது. இதற்காக, 3 பில்லியன் டாலர்களுக்கும் மேலான தொகையை முதலீடு செய்துள்ளது. தென்கொரியாவில் உள்ள ஆலையில் இவை தயாரிக்கப்படும் என்று சாம்சங் கூறியுள்ளது.