தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்குவது தொடர்பாக இலங்கை மந்திரிகள் ஆலோசனை நடத்தினர்.
இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் துறை மந்திரி நிமல் சிறிபாலடி சில்வா தலைமையிலான கலந்துரையாடல் கூட்டம் தலைநகர் கொழும்பில் நேற்று நடந்தது. கூட்டத்தில் இலங்கையின் வடபகுதியில் உள்ள தலைமன்னாருக்கும், இந்தியாவின் தென்முனையில் உள்ள தனுஷ்கோடிக்கும் இடையேயான ராமர் பால பகுதியை அபிவிருத்தி செய்ய வேண்டும்.
ராமர் பாலம் வழியாக தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்குவதன் மூலம் சுற்றுலாத்துறையை மேம்படுத்தலாம் என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்ற ஆரம்ப கட்ட கலந்துரையாடல் கூட்டம் சாதகமாக முடிவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.