செந்தில் பாலாஜி மீதான வழக்கு ஏப்ரல் 4ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

செந்தில் பாலாஜி மீது பதியப்பட்ட வழக்கின் மீதான விசாரணை நான்காம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு, காவல்துறை வழக்கு தாக்கல் செய்தது. இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி உட்பட்ட 47 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு மீதான விசாரணை இன்று சிறப்பு நீதிமன்றத்தில் வந்த போது செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில் […]

செந்தில் பாலாஜி மீது பதியப்பட்ட வழக்கின் மீதான விசாரணை நான்காம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு, காவல்துறை வழக்கு தாக்கல் செய்தது. இதனை தொடர்ந்து செந்தில் பாலாஜி உட்பட்ட 47 பேர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு மீதான விசாரணை இன்று சிறப்பு நீதிமன்றத்தில் வந்த போது செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை விசாரணை அனுமதிக்கான ஒப்புதல் கடிதம் இன்னும் கிடைக்கவில்லை என மத்திய குற்றப்பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் இதில் 900 பேர் சேர்ந்து உள்ளதால் அனுமதி கிடைப்பதில் தாமதம் எனவும் வழக்கு நடத்துவதற்கான அனுமதி தமிழக அரசிடமிருந்து இன்னும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுm இதனை அடுத்து இந்த விசாரணை ஏப்ரல் நான்காம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu