பாராளுமன்ற தேர்தலில் ஆறாம் கட்ட தேர்தலில் 57 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக ஏப்ரல் 19, 26 மே 7,13, 20,25 மற்றும் ஜூன் 1ம் தேதிகளில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஏப்ரல் 19ஆம் தேதி 102 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தலும், 26ஆம் தேதி 89 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தலும் வெற்றிகரமாக நடைபெற்றது. அதனை அடுத்து தற்போது மூன்றாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் மே 7ம் தேதி 94 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. மேலும் நான்காம் கட்டமாக 13ஆம் தேதி 96 தொகுதிகளுக்கும், ஐந்தாம் கட்டமாக இருபதாம் தேதி 49 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. ஆறாம் கட்டமாக மொத்தம் 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில் நேற்று முதல் மனு தாக்கல் தொடங்கி உள்ளது. மனு தாக்கல் செய்ய மே ஆறாம் தேதி கடைசி நாளாகும். அதனை தொடர்ந்து மனுக்கள் மீதான பரிசீலனை ஏழாம் தேதியும், இறுதி வேட்பாளர் பட்டியல் ஒன்பதாம் தேதியும், 25ஆம் தேதி ஆறாம் கட்ட தேர்தலுக்கான
ஓட்டுபதிவும் நடைபெறுகிறது.