வல்லூர் அனல் மின் நிலையத்தில் டர்பன் ஜெனரேட்டர் வெடித்து திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தேசிய மின் கழகமும் தமிழ்நாடு உற்பத்தி மின் மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து வல்லூரில் அனல் மின் நிலையம் இயக்கி வருகிறது. இங்கு மூன்று அலகுகள் அனைத்து ஒவ்வொரு அலகிலும் 500 வீதம் மொத்தம் 1500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதில் திடீரென நேற்று 1 வது அலகில் டர்பன் ஜெனரேட்டர் வெடித்து விபத்துக்கு உண்டானது. தீ டர்பனில் பற்றி எரிந்தது. அனல் மின் நிலையத்தில் எறிந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடினர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி இந்த தீ விபத்து அணைக்கப்பட்டது. மேலும் இந்த தீ விபத்தினால் அங்கு வேலை செய்த ஊழியர்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை. மேலும் ஒரு அலகில் 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளத. இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட அலகில் மறுசீரமைப்பு பணிகள் முடிந்து மீண்டும் மின் உற்பத்தி தொடங்க சுமார் 1 மாதம் வரை ஆகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












