அமெரிக்கா - முதல் சீக்கியப் பெண் நீதிபதி பதவியேற்பு

January 9, 2023

அமெரிக்காவில், முதல் முதலாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய பெண் மன்பிரீத் மோனிகா சிங், ஹாரிஸ் கவுன்ட்டி நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். கடந்த 1970களில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த மன்பிரீத் மோனிகா சிங்கின் பெற்றோர் அங்கேயே வசித்து வந்த நிலையில், ஹூஸ்டனில் பிறந்து வளர்ந்த மன்பிரீத், தற்போது, பெலாரில், கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவர், அங்கு 20 வருடங்களாக வக்கீல் தொழில் மேற்கொண்டு, தற்போது, ஹாரிஸ் கவுன்ட்டி சிவில் நீதிமன்றத்தில் நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார். அவரது பதவியேற்பு […]

அமெரிக்காவில், முதல் முதலாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கிய பெண் மன்பிரீத் மோனிகா சிங், ஹாரிஸ் கவுன்ட்டி நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த 1970களில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த மன்பிரீத் மோனிகா சிங்கின் பெற்றோர் அங்கேயே வசித்து வந்த நிலையில், ஹூஸ்டனில் பிறந்து வளர்ந்த மன்பிரீத், தற்போது, பெலாரில், கணவன் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அவர், அங்கு 20 வருடங்களாக வக்கீல் தொழில் மேற்கொண்டு, தற்போது, ஹாரிஸ் கவுன்ட்டி சிவில் நீதிமன்றத்தில் நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.

அவரது பதவியேற்பு விழாவில், அமெரிக்காவின் முதல் தெற்காசிய நீதிபதியாக இருந்த இந்திய-அமெரிக்கர் ரவி சந்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார். சீக்கிய சமுதாயத்திற்கு இது மிகப்பெரிய நிகழ்வு என அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். அத்துடன், சீக்கியர்களுக்கு மட்டுமல்லாது, பெண்களுக்கான தூதுவராகவும் மன்பிரீத் திகழ்வதாக புகழாரம் சூட்டினார். அத்துடன், இவரது நியமனம் நிறப் பாகுபாட்டை களைந்துள்ளதாகவும் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu