அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கி ஆகியவை திவால் ஆனதை தொடர்ந்து, மூன்றாவது வங்கியாக, ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் பேங்க் இந்த வரிசையில் இணைந்துள்ளது. தற்போதைய நிலையில், இந்த வங்கியின் பங்குகள் 21% க்கும் கீழ் சரிந்துள்ளன. மேலும், கடந்த 5 வர்த்தக நாட்களில், கிட்டத்தட்ட 70% பங்கு மதிப்பை இந்த வங்கி இழந்துள்ளது. எனவே, இந்த வங்கி திவால் நிலையில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் பேங்க்கின் நிதி மற்றும் ரொக்கம் குறித்து Fitch மற்றும் S&P நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தன. அதன்படி, தற்போது வங்கியில் உள்ள ரொக்கம் பெருமளவு குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால், முதலீட்டாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். இந்த நிலையை எதிர்கொள்ள, ஃபர்ஸ்ட் ரிபப்ளிக் பேங்க், தனது பங்குகளை விற்க பரிசீலித்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. அதே வேளையில், தொடர்ந்து வரும் வங்கி மூடல் சம்பவங்கள் பொதுமக்களை கலக்கமடைய செய்துள்ளது.














