ஜார்ஜியா நாடு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் நோக்கில் உள்ளது. அதே வேளையில், ஐரோப்பிய ஒன்றியமும் ஜார்ஜியாவை இணைப்பதற்கு தயாராக உள்ளதாக கூறியுள்ளது. இதன் காரணமாக, 4 ஆண்டுகளுக்கு முன்னால், ஜார்ஜியாவுக்கு வர்த்தக போக்குவரத்தை ரஷ்யா நிறுத்தியது. தற்போது, 4 ஆண்டுகள் கழித்து, ரஷ்யாவின் முதல் வர்த்தக விமானம் ஜார்ஜியா வந்தடைந்துள்ளது.
அசிமித் ஏர்லைன்ஸ் விமானம் மாஸ்கோவில் இருந்து ஜார்ஜியாவின் ட்பிலிசி விமான நிலையத்திற்கு நேற்று வந்தடைந்தது. ரஷ்ய அதிபர் புதினின் இந்த நடவடிக்கையை ஜார்ஜியா அரசு வரவேற்றுள்ளது. மேலும், ஜார்ஜிய குடிமக்களின் விசா தேவைகளை எளிமையாக்கியதற்கும், தடையை நீக்கியதற்கும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இன்று முதல் ஜார்ஜிய விமானங்கள் ரஷ்யாவுக்கு இயக்கப்பட உள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எச்சரிக்கையை மீறி, ரஷ்யா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது கவனிக்கத்தக்கது.