கடலாற்றின் மீன்பிடி தடை காரணமாக 10,000க்கும் மேற்பட்டோர் வேலையிழந்தனர்.
தமிழக முழுவதும் காற்றழுத்த தாழ்வுநிலையின் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது, குறிப்பாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் கொந்தளிப்பதால், கடந்த ஒருவாரமாக கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகங்களில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டன. இந்த தடை காரணமாக 10,000க்கும் மேற்பட்டோர் வேலை இழந்தனர். இதனையடுத்து காற்றழுத்த தாழ்வுநிலை நகர்ந்து சென்றதையடுத்து, கடல் காற்றின் வேகம் குறைந்தது. 7 நாட்கள் பிறகு, மீன்பிடிக்க மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதிகளில் இன்று அதிகாலை மீனவர்கள் 500-க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்குப் புறப்பட்டனர்.