5 லிட்டர் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை அதிகரித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன் தயிர் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்ந்த நிலையில் தற்போது ஆவின் பால் பாக்கெட் நிலை உயர்ந்துள்ளது. 120 கிராம் தயிர் பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது தற்போது 100 கிராம் ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அதே போல் 5 லிட்டர் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் விலை லிட்டருக்கு ரூபாய் 2 வீதம் உயர்ந்து, 210 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் டயட் பால் என 1/2 லிட்டர் அளவில் விற்கப்படும் பால் பாக்கெட்டின் கலரை மஞ்சள் நிறத்தில் மாற்ற ஆவின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.