இந்தியாவில் 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான தேதி வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே தெலுங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஸ்கர்,ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை காலம் முடிவடைகிறது. இந்த ஐந்து மாநிலங்களில் நடைபெற வேண்டிய 2023 -க்கான சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இதனை அடுத்து இந்த தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தை தொடங்கி விட்டன. தேர்தலுக்கான தேதி அட்டவணையை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இதில் சட்டீஸ்கர் மாநிலத்தில் மட்டும் 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி நவம்பர் 7ஆம் தேதி மிசோராமில் ஓட்டுப்பதிவு நடைபெறும்.நவம்பர் 13-ஆம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். அன்றே மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. மனுதாக்கல் செய்ய கடைசி நாள் 20ஆம் தேதி ஆகும். சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஓட்டு பதிவு நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலுக்கான அறிக்கை 13 ஆம் தேதி, அடுத்த கட்ட தேர்தலுக்கு 21ம் தேதியும் அறிக்கை வெளியிடப்படுகிறது. மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 21 ஆம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது. மனு தாக்கல் செய்ய 30ம் தேதி வரை அனுமதிக்கப்படுகிறது.
ராஜஸ்தானில் 23ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும். 30 ஆம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது. 6ம் தேதி வரை மனுதாக்கல் செய்யலாம். தெலுங்கானாவில் 30 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. 3ம் தேதியில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். 10ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம். டிசம்பர் 3ஆம் தேதி பதிவான வாக்குகள் என்ன பற்றி முடிவுகள் வெளியிடப்படும்.














