பெருவில் திடீர் நிலச்சரிவு - பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு

February 7, 2023

பெருவில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. தென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த மழை பெய்து வருகிறது. அந்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இடைவிடாமல் கொட்டும் மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் பலர் சிக்கியுள்ளனர். வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 36 பேர் பலியாகி உள்ளனர். கமனா மாகாணத்தில் உள்ள மரியானோ நிக்கோலாஸ் பகுதியில் பலரது உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் […]

பெருவில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.

தென் அமெரிக்க நாடான பெருவில் பலத்த மழை பெய்து வருகிறது. அந்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இடைவிடாமல் கொட்டும் மழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் பலர் சிக்கியுள்ளனர். வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 36 பேர் பலியாகி உள்ளனர். கமனா மாகாணத்தில் உள்ள மரியானோ நிக்கோலாஸ் பகுதியில் பலரது உடல்கள் மீட்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பலத்த மழையால் சாலைகள், பாலங்கள், வீடுகள் சேதமடைந்துள்ளன. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்புப்பணி நடந்து வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu