தமிழகத்தில் நாளை மிலாடி நபி பண்டிகையையொட்டி அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு விடுமுறை மற்றும் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி என தொடர்ச்சியாக விடுமுறைகள் வருகின்றன. மேலும் காலாண்டு விடுமுறை காரணமாக பள்ளி மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விமான மூலம் சுற்றுலா பயணம் செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.
பொதுவாக பண்டிகை காலங்களில் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். அத்துடன் இந்த முறை தொடர் விடுமுறை காரணமாக விமான பயணங்கள் அதிகமாக உள்ளது. இதனால் பயணிகளின் டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன. அதில் சென்னையிலிருந்து தாய்லாந்து, துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் வழக்கமான கட்டணங்களை விட தற்போது கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள சுற்றுலா தளங்களின் விமான கட்டணமும் உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து மைசூர், செல்லும் விமானத்தின் கட்டணமும் உயர்ந்துள்ளது.அதே சமயம் கோவை - கோவா, மதுரை, திருச்சி, கோவை போன்ற இடங்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணங்கள் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம்