பைக்காரா நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு

ஊட்டி பைக்காரா நீர்வீழ்ச்சியில் கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று பைக்காரா அருவி. இங்கு பைக்காரா என்ற ஊரில் உற்பத்தியாகும் ஆறானது பைக்காரா அருவியாக உருவெடுத்துள்ளது. இந்த அருவியானது மலைகளுக்கு நடுவே 55 மீட்டர் மற்றும் 61 மீட்டர் உயரத்தில் இருந்து சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கிறது. மேலும் இந்த அணையில் இருந்து தினமும் மின் உற்பத்திக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது கடந்த சில நாட்களாக […]

ஊட்டி பைக்காரா நீர்வீழ்ச்சியில் கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்று பைக்காரா அருவி. இங்கு பைக்காரா என்ற ஊரில் உற்பத்தியாகும் ஆறானது பைக்காரா அருவியாக உருவெடுத்துள்ளது. இந்த
அருவியானது மலைகளுக்கு நடுவே 55 மீட்டர் மற்றும் 61 மீட்டர் உயரத்தில் இருந்து சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கிறது. மேலும் இந்த அணையில் இருந்து தினமும் மின் உற்பத்திக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக பைக்காரா அணையின் நீர்வரத்து அதிகரித்து வந்தது. இதனால் பைக்காரா நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu