கூவம் ஆற்றில், நீர்வரத்து அதிகரிப்பால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
வடதமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக, காவேரிப்பாக்கம் ஏரி நிரம்பி, உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த உபரிநீரானது, கூவம் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கூவம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக, மதுரவாயல், அடைகலப்பட்டு, திருவேற்காடு ஆகிய பகுதிகளில், ஏற்கனவே 3 தரை பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், கூவம் ஆற்றில் தொடர்ந்து வெள்ளம் அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.