அசாமில் வெள்ளம்: இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

அசாமில் கனமழையின் காரணமாக இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்தியாவில் கனமழையில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் அசாமும் ஒன்று. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக அசாமின் பெரும்பாலான மாவட்டங்கள் மிகவும் அதிக அளவில் பாதித்தது. பின்னர் ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டதால் மக்கள் பழைய நிலைக்கு திரும்பி வந்தனர். இந்நிலையில் 2 வது முறையாக மீண்டும் கனமழை பெய்தது. இதனால் அசாமில் உள்ள 13 முக்கிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து […]

அசாமில் கனமழையின் காரணமாக இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

இந்தியாவில் கனமழையில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் அசாமும் ஒன்று. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக அசாமின் பெரும்பாலான மாவட்டங்கள் மிகவும் அதிக அளவில் பாதித்தது. பின்னர் ராணுவ வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டதால் மக்கள் பழைய நிலைக்கு திரும்பி வந்தனர். இந்நிலையில் 2 வது முறையாக மீண்டும் கனமழை பெய்தது. இதனால் அசாமில் உள்ள 13 முக்கிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் சில மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுவரை அசாமில் கனமழையால் 20 மாவட்டங்களில் உள்ள 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர். 46 பேர் மழை வெள்ளம் புயல் நிலச்சரிவு ஆகியவற்றில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 72 முகாம்களில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 54 இடங்களில் 614 மாநில தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu