2023 ஆம் ஆண்டில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் நடத்தப்பட்ட அறிவியல் ஆய்வுகள் குறித்த பட்டியலை நாசா வெளியிட்டுள்ளது. நாசாவின் அதிகாரப்பூர்வ யூடியூப் தளத்தில் விரிவான விவரங்கள் உள்ளன.
‘சர்வதேச விண்வெளி நிலையத்துக்குள் ஒரு இசைப் பயணம்’ என்ற தலைப்பில் நாசா யூடியூப் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 2023 ஆம் ஆண்டில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் நடத்தப்பட்ட பல்வேறு அறிவியல் ஆய்வுகள் குறித்த காணொளி இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, விண்வெளி நிலையத்தில் செடிகள் பயிரிட்டது, பூக்கள் மலர்ந்தது, விண்வெளியில் தீ பற்றவைத்து ஆய்வு செய்தது, விண்வெளியில் திரவங்கள் எவ்வாறு இருக்கும் போன்ற காணொளிகள் இடம் பெற்றுள்ளன. இது பொதுமக்கள் மத்தியில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது.