புறக்கோளின் வெப்பநிலையை முதல்முறையாக அளந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, இதுவரை புகைப்படங்களை அனுப்பி வந்த நிலையில், முதல் முறையாக சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள புறக்கோள் ஒன்றின் வெப்பநிலையை அளந்து வெளியிட்டுள்ளது. இதன் மூலம், இந்த தொலைநோக்கி ஒரு ராட்சச தெர்மாமீட்டர் போல செயல்படுவதாக நாசா கூறியுள்ளது. பூமியிலிருந்து 40 ஒளி ஆண்டுகள் தொலைவில், பூமியைப் போலவே இருக்கும் கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த கோள்களின் கண்டுபிடிப்புகள் மூலம் மகிழ்ச்சி அடைந்த விஞ்ஞானிகள், சிறிய நட்சத்திரம் ஒன்றை சுற்றி வரும் Trappist 1b என்ற […]

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, இதுவரை புகைப்படங்களை அனுப்பி வந்த நிலையில், முதல் முறையாக சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள புறக்கோள் ஒன்றின் வெப்பநிலையை அளந்து வெளியிட்டுள்ளது. இதன் மூலம், இந்த தொலைநோக்கி ஒரு ராட்சச தெர்மாமீட்டர் போல செயல்படுவதாக நாசா கூறியுள்ளது.

பூமியிலிருந்து 40 ஒளி ஆண்டுகள் தொலைவில், பூமியைப் போலவே இருக்கும் கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த கோள்களின் கண்டுபிடிப்புகள் மூலம் மகிழ்ச்சி அடைந்த விஞ்ஞானிகள், சிறிய நட்சத்திரம் ஒன்றை சுற்றி வரும் Trappist 1b என்ற கிரகத்தை ஆய்வு செய்யத் தொடங்கினர். அந்த வகையில், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் உள்ள இன்ஃப்ரா ரெட் கருவி, புறக்கோளின் பிரகாசத்தில் உள்ள அளவை துல்லியமாக எடுத்து கூறியுள்ளது. கோள், நட்சத்திரத்தை சுற்றும் பகல் பொழுதில் காணப்படும் பிரகாசம் மற்றும் இரவுப் பொழுதில் காணப்படும் பிரகாசம் ஆகியவை அளவிடப்பட்டு, இரண்டுக்கும் இடையிலான வித்தியாசம் கணக்கிடப்பட்டு, வெப்பநிலை கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி, புறக்கோளின் பகல் நேர வெப்பநிலை 230 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu