இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 59953 கோடி டாலர்களாக உயர்வு

கடந்த மே 12ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 59953 கோடி டாலர்களாக உயர்ந்துள்ளது. இது முந்தைய வாரத்தை விட 355.3 கோடி டாலர்கள் உயர்வாகும். மத்திய ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்கள் பட்டியல் இந்த தகவலை தெரிவித்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை படி, கடந்த மே 12ஆம் தேதி, இந்தியாவின் அந்நிய நாணய சொத்து மதிப்பு 357.7 கோடி டாலர்கள் உயர்ந்து, 52959.8 கோடி டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், […]

கடந்த மே 12ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 59953 கோடி டாலர்களாக உயர்ந்துள்ளது. இது முந்தைய வாரத்தை விட 355.3 கோடி டாலர்கள் உயர்வாகும். மத்திய ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்கள் பட்டியல் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை படி, கடந்த மே 12ஆம் தேதி, இந்தியாவின் அந்நிய நாணய சொத்து மதிப்பு 357.7 கோடி டாலர்கள் உயர்ந்து, 52959.8 கோடி டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் ஒட்டுமொத்த தங்கம் கையிருப்பு 3.8 கோடி டாலர்கள் உயர்ந்து, 4635.3 கோடி டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், சர்வதேச நாணய நிதியத்தில் உள்ள இந்தியாவின் கையிருப்பு தொகை 2.8 கோடி டாலர்கள் சரிந்து, 516.4 கோடி டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், எஸ் டி ஆர் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தால் உருவாக்கப்படும் கையிருப்பு 3.5 கோடி டாலர்கள் குறைந்து, 1841.3 கோடி டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu