நெதர்லாந்தில் இந்திய உணவகம் நிறுவிய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா

June 23, 2023

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, நெதர்லாந்தில் புதிய உணவகம் ஒன்றை நிறுவியுள்ளார். ஆம்ஸ்டர்டாம் பகுதியில், ‘ரெய்னா இந்திய உணவகம்’ என்ற பெயரில் உணவகம் திறக்கப்பட்டுள்ளதை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இந்தியாவின் பல பகுதிகளில் காணப்படும் உணவு முறைகளை, ஐரோப்பாவின் இதய பகுதிக்கு கொண்டு வந்துள்ளேன்.” என்று அவர் கூறியுள்ளார். இந்த உணவகம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். சுரேஷ் ரெய்னா, தனது இந்த புதிய வர்த்தக பயணத்தில் […]

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, நெதர்லாந்தில் புதிய உணவகம் ஒன்றை நிறுவியுள்ளார். ஆம்ஸ்டர்டாம் பகுதியில், ‘ரெய்னா இந்திய உணவகம்’ என்ற பெயரில் உணவகம் திறக்கப்பட்டுள்ளதை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இந்தியாவின் பல பகுதிகளில் காணப்படும் உணவு முறைகளை, ஐரோப்பாவின் இதய பகுதிக்கு கொண்டு வந்துள்ளேன்.” என்று அவர் கூறியுள்ளார். இந்த உணவகம் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். சுரேஷ் ரெய்னா, தனது இந்த புதிய வர்த்தக பயணத்தில் இணைந்திருக்குமாறு மக்களைக்
கேட்டுக் கொண்டுள்ளார். அவரது சமூக வலைத்தள பதிவு மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu