முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் காலமானார்

January 13, 2023

முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் உடல் நலக்குறைவால் காலமானார். ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ். நேற்று மாலை நினைவிழந்த நிலையில் ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி இரவு காலமானார். பீஹார் முதல்வர் நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகி, லோக் தந்திரிக் ஜனதா […]

முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ் உடல் நலக்குறைவால் காலமானார்.

ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் சரத் யாதவ். நேற்று மாலை நினைவிழந்த நிலையில் ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி இரவு காலமானார்.

பீஹார் முதல்வர் நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து விலகி, லோக் தந்திரிக் ஜனதா தளம் என்ற புதிய கட்சியை துவக்கினார். பின், அந்த கட்சியை லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் இணைத்தார். சரத்யாதவ் மறைவுக்கு பிரதமர் மோடி மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu