தைவானை சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம், ஆப்பிள் ஐபோன் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம், தற்போது தெலுங்கானாவில் புதிய ஆலை ஒன்றை அமைக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே டி ராமராவ் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.
ஹைதராபாத் அருகே, ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள கொங்கர் கலாம் என்ற இடத்தில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை அமைய உள்ளது. இதற்காக, 500 மில்லியன் டாலர் - அதாவது 4000 கோடி ரூபாய் பணத்தை, பாக்ஸ்கான் முதலீடு செய்ய உள்ளது. முதற்கட்டமாக, இந்த ஆலையின் ஒரு பகுதி திறக்கப்பட உள்ளது. இதன் மூலம், 25000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.














