சென்னையில் உள்ள பாக்ஸ்கான் ஆலையில், புதிதாக 2 உற்பத்தி தளங்கள் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதன் மூலம், சென்னையில் உற்பத்தி அதிகரிக்கப்படும் என்று கருதப்படுகிறது.
சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில், ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் உற்பத்தி தளம் உள்ளது. இதே வளாகத்திற்குள், புதிதாக 2 கட்டிடங்கள் கட்ட பாக்ஸ்கான் நிறுவனம் விரும்புவதாகவும், இதற்கான ஒப்புதல் மற்றும் அனுமதி கிடைத்தவுடன், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனவும், கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, பெங்களூருவில் உள்ள வைட்ஃபீல்டு பகுதியில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை நிறுவ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. எனவே, எதிர்காலத்தில், இந்தியாவின் ஐபோன் உற்பத்தி பன்மடங்காக உயரும் என்று கருதப்படுகிறது.