பிரான்சில் இடதுசாரிகள் புதிய கூட்டணி

June 15, 2024

பிரான்சில் தீவிர வலதுசாரி கட்சிகளை தோற்கடிக்க இடதுசாரி கட்சிகள் மக்கள் முன்னணி என்ற புதிய கூட்டணியை அமைத்துள்ளன. கடந்த வாரம் ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தீவிர வலதுசாரி கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்றின. பிரான்சிலும் அவர்கள் அதிக வாக்குகளை பெற்றனர். அதிபர் மேக்ரானின் மறுமலர்ச்சி கட்சி இரண்டாம் இடத்தை பெற்றது. அதையடுத்து நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்துவிட்டு புதிய தேர்தல் நடத்துவதாக மேக்ரான் அறிவித்தார். இந்த தேர்தல் வரும் 30ஆம் தேதியும், ஜூலை 7ஆம் தேதியும் […]

பிரான்சில் தீவிர வலதுசாரி கட்சிகளை தோற்கடிக்க இடதுசாரி கட்சிகள் மக்கள் முன்னணி என்ற புதிய கூட்டணியை அமைத்துள்ளன.

கடந்த வாரம் ஐரோப்பிய நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் தீவிர வலதுசாரி கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்றின. பிரான்சிலும் அவர்கள் அதிக வாக்குகளை பெற்றனர். அதிபர் மேக்ரானின் மறுமலர்ச்சி கட்சி இரண்டாம் இடத்தை பெற்றது. அதையடுத்து நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்துவிட்டு புதிய தேர்தல் நடத்துவதாக மேக்ரான் அறிவித்தார். இந்த தேர்தல் வரும் 30ஆம் தேதியும், ஜூலை 7ஆம் தேதியும் இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.

இந்நிலையில் தற்போது வலிமையுடன் உள்ள தேசியவாத பேரணி கட்சியை எதிர்ப்பதற்காக மேக்ரானின் அழைப்பை ஏற்று இடதுசாரி கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu