பாகிஸ்தானின் குவெட்டா நகரில் உள்ள சஞ்சிதி பகுதியில் அமைந்த நிலக்கரி சுரங்கத்தில், கடந்த முன்தினம் வாயு வெடிப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தில் சுரங்கத்தின் ஆழத்தில் வேலை செய்த தொழிலாளர்கள் பலர் சிக்கிக் கிடக்கின்றனர். அவர்களை மீட்க மாகாண பேரிடர் மேலாண் கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 27 மணிநேரமாக முன்னெடுக்கப்பட்ட இந்த பணியில், 4 பேரின் உடல்கள் 3,000 அடி ஆழத்தில் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 8 பேர் சுரங்கத்தில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. அவர்கள் 4,300 அடி ஆழத்தில் இருக்கலாம் என கருதப்படுகிறது.














