சைபர் குற்றங்கள் குறித்து வங்கி நிறுவனங்களுக்கு அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், வங்கி மோசடிகள் 50% குறைந்துள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், 19485 கோடி வங்கி மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுவே, கடந்த ஆண்டில் 36316 வழக்குகள் பதிவாகி இருந்தன. எனவே, 46% அளவில் மோசடி வழக்குகள் குறைந்துள்ளன.
மேலும், வங்கி மோசடி வழக்குகள் எண்ணிக்கையில், கார்டுகள், நெட் பேங்கிங் போன்ற டிஜிட்டல் தொடர்பான மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நேரடியாக, காசு, பணம் சம்பந்தப்பட்ட மோசடிகள் குறைந்துள்ளன. அத்துடன், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தனியார் வங்கிகளில் நடந்த மோசடிகளின் எண்ணிக்கை பொதுத்துறை வங்கிகளில் பதிவான மோசடி வழக்குகளின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. அதே வேளையில், மோசடி வழக்குகளில் பதிவான தொகையில், 66.7% பொதுத்துறை வங்கிகளை சேர்ந்தவையாக உள்ளது.