பாரிசில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச் வலது கால் முட்டியில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக ஆட்டத்தில் இருந்து விலகினார்.
பாரிசில் கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றைப் பிரிவில் ஜோகோவிச் தனது வலது கால் முட்டியில் ஏற்பட்ட காயத்தை பொருட்படுத்தாமல் நான்காவது சுற்றில் போராடி வெற்றியை பெற்றார். இந்நிலையில் ஸ்கேன் பரிசோதனையில் காயம் தீவிரமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ஜோகோவிச் விலகினார். இதனால்
தனது நம்பர் ஒன் இடத்தை இழந்துள்ளார். இரண்டாவது இடத்தில் இருக்கும் இத்தாலியின் ஜானிக் சின்னர் முதல் முறையாக நம்பர் ஒன் இடத்தை பிடிக்கிறார். வருகிற 10-ஆம் தேதி வெளியாகும் புதிய தரவரிசையில் ஜானிக் சின்னர் நம்பர் ஒன் என்ற இடத்தை அலங்கரிக்க உள்ளார்