பாரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் கோகோ காப் - ஓல்கா டானிலோவிச் நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
பாரிசில் பல முன்னணி வீரர்கள் கலந்து கொள்ளும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காப் உக்ரைன் வீராங்கனை டயானா யாஸ்ட்ரெம்ஸ்கா உடன் மோதினார். இதில் கோகோ காப் 6-2,6-4 என்ற நேர் செட் கணக்கில் டையானவை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இதேபோல செர்பியா வீராங்கனை ஓல்கா டானிலோவிச், குரோஷியா வீராங்கனை ஆன டோனா வெகிக்கை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை இழந்தவர். இரண்டாவது செட்டை வென்றார். இதன் மூலம் 0-6, 7-5, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று நான்காவது சுற்றுக்கு முன்னேறி உள்ளார்