சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புதிய உணவுப் பொருட்கள் - தயார் நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்து பணியாற்றும் விண்வெளி வீரர்களுக்கு, புதிய உணவுப் பொருட்கள் மற்றும் ஆய்வு உபகரணங்களை, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் கொண்டு செல்ல உள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும் 28 வது வர்த்தக விநியோக திட்டம் இதுவாகும். இந்த திட்டத்தின் படி, நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் ஞாயிற்றுக்கிழமை ஏவப்பட இருந்தது. ஆனால், புளோரிடா மாகாணத்தில் கடுமையான காற்று வீசியதால், திட்டம் இன்று […]

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி இருந்து பணியாற்றும் விண்வெளி வீரர்களுக்கு, புதிய உணவுப் பொருட்கள் மற்றும் ஆய்வு உபகரணங்களை, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் கொண்டு செல்ல உள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும் 28 வது வர்த்தக விநியோக திட்டம் இதுவாகும்.

இந்த திட்டத்தின் படி, நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து, ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் ஞாயிற்றுக்கிழமை ஏவப்பட இருந்தது. ஆனால், புளோரிடா மாகாணத்தில் கடுமையான காற்று வீசியதால், திட்டம் இன்று ஒத்திவைக்கப்பட்டது. இன்று இரவு 9:17 மணிக்கு, ராக்கெட் ஏவப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம், பால்கன் 9 ராக்கெட் உடன் இணைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இதனுடன் சேர்த்து, விண்வெளி நிலையத்திற்கான புதிய சூரிய எரிசக்தி உபகரணங்களை நாசா அனுப்புகிறது. இந்த உபகரணங்கள், விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்ட பின்னர், விண்வெளி நிலையத்தின் செயல்பாடுகளில் 20 முதல் 30% உயர்வு காணப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu