உக்ரைன் எரிசக்தி உள்கட்டமைப்பு மீது மேலும் ரஷ்ய தாக்குதல் நடைபெறும் - ஜெலென்ஸ்கி

November 7, 2022

உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீது ரஷ்யாவின் தாக்குதல்கள் சாத்தியம் என்று எச்சரித்தார். உக்ரைனில் தற்போது 4.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இல்லாமல் இருக்கின்றனர். அதோடு திட்டமிடப்பட்ட மின்சார விநியோகத்தில் நாடு 32 சதவீத பற்றாக்குறையை எதிர்கொண்டது. கெர்சன் பிராந்தியத்தின் ஆளுநர் யாரோஸ்லாவ் யானுஷெவிச் கூறுகையில், ரஷ்யப் படைகள் சுமார் 1.5 கிமீ மின் கம்பிகளை அழித்ததாகவும், பெரிஸ்லாவ் நகரின் மின்சார விநியோகத்தை துண்டித்ததாகவும் கூறினார். அங்கு குளிர்காலம் தொடுங்குவதை அடுத்து […]

உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தனது நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீது ரஷ்யாவின் தாக்குதல்கள் சாத்தியம் என்று எச்சரித்தார்.

உக்ரைனில் தற்போது 4.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மின்சாரம் இல்லாமல் இருக்கின்றனர். அதோடு திட்டமிடப்பட்ட மின்சார விநியோகத்தில் நாடு 32 சதவீத பற்றாக்குறையை எதிர்கொண்டது. கெர்சன் பிராந்தியத்தின் ஆளுநர் யாரோஸ்லாவ் யானுஷெவிச் கூறுகையில், ரஷ்யப் படைகள் சுமார் 1.5 கிமீ மின் கம்பிகளை அழித்ததாகவும், பெரிஸ்லாவ் நகரின் மின்சார விநியோகத்தை துண்டித்ததாகவும் கூறினார். அங்கு குளிர்காலம் தொடுங்குவதை அடுத்து போரின் பாதிப்புகள், விலைவாசி உயர்வு , மின்சாரம் இல்லாமை போன்றவை மக்களை தலை நகரை விட்டு வெளியேற தூண்டி வருகிறது. ஜனாதிபதியின் ஆலோசகர் Mykhailo Podolyak கூறுகையில், உக்ரைன் அதன் எரிசக்தி உள்கட்டமைப்பில் ரஷ்ய தாக்குதல்கள் இருந்தபோதிலும் அதை சமாளிக்கும் திறன்களை கையாள்வதாக கூறினார். இது வான் பாதுகாப்பைப் பயன்படுத்துவதன் மூலமும், உள்கட்டமைப்பு மற்றும் நுகர்வை மேம்படுத்துவதன் மூலமும் செய்யப்படும் என்று கூறினார்.

இதற்கிடையே ஞாயிற்றுக்கிழமை அன்று, உக்ரைனின் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் டினிப்ரோ ஆற்றின் கெர்சனுக்கு மேல்புறத்தில் உள்ள நோவா ககோவ்கா அணை உக்ரேனியப் படைகளின் தாக்குதலில் சேதமடைந்ததாக ரஷ்ய செய்தி நிறுவனங்கள் அறிவித்தது. இந்நிலையில் வெள்ளியன்று தலைநகர் கிய்வ் சென்ற அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், ரஷ்ய அதிகாரிகளுடன் ரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தினார் என கூறப்படுகிறது. மேலும் ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தைக்கு சமிக்ஞை செய்யுமாறு உக்ரைனை அமெரிக்கா வற்புறுத்தியுள்ளது .

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu