ஜப்பானின் ஹிரோஷிமாவில் ஜி7 கூட்டமைப்பு நாடுகளின் சந்திப்பு நடைபெற்றது. உலகின் பணக்கார ஜனநாயக நாடுகளின் தலைமைகள் இதில் பங்கேற்றனர். இந்த சந்திப்பில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, ரஷ்யாவை எதிர்த்து உக்ரைனுக்கு ஆதரவு வழங்க உறுதிமொழி எடுக்கப்பட்டது.
உக்ரைன் ரஷ்யா போரில், தொடர்ந்து ரஷ்யாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஜி7 மாநாட்டில் திட்டமிடப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு தேவையான நிதி ஆதரவை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ரஷ்யாவுக்கு ஆதரவளித்து உதவிகளை வழங்கும் பிற நாடுகளை தடுக்க, ஒத்துழைப்போடு முயற்சிகள் செய்யவும், ஒருங்கிணைப்புடன் இணைந்து செயலாற்றவும் ஜி7 உறுப்பு நாடுகள் உறுதி பூண்டுள்ளன.