கௌதம் அதானி மற்றும் அவரது குடும்பத்தினர் இணைந்து அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தில் அதிக முதலீடுகளை செய்ய உள்ளனர்.
அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தில் 1 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கௌதம் அதானி குடும்பத்தினர் மேற்கொள்ள இந்த முதலீடு, இந்திய மதிப்பில் 8340 கோடி ரூபாய் ஆகும். அதானி குழுமத்தின் வர்த்தக விரிவாக்கத்தின் பகுதியாக இந்த முதலீடு செய்யப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, டிசம்பர் 26 ஆம் தேதி நிர்வாக கூட்டம் நடத்தப்படுகிறது. அதன் போது முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கருதப்படுகிறது. புத்தாக்க எரிசக்தி துறையில், அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. இந்திய பங்குச் சந்தையிலும் அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன.