அதானி குழுமத்தின் மீது நிதி மோசடிகளை சுமத்தி, ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதிலிருந்து, கவுதம் அதானியின் சொத்து மதிப்பு பன்மடங்கு சரிந்தது. தற்போது, அதானி குழும பங்குகள் மீண்டும் உயர்ந்து வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, ப்ளூம்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில், கௌதம் அதானி 18 ம் இடத்திற்கு முன்னேறி உள்ளார். அதே வேளையில், முகேஷ் அம்பானி 13 ஆம் இடத்தில் உள்ளார்.
‘அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டில் உண்மை இல்லை’ என உச்ச நீதிமன்ற குழு தெரிவித்ததை அடுத்து, அதானி பங்குகள் உயரத் தொடங்கி, அண்மையில், அதானி குழுமத்தின் மொத்த பங்கு மதிப்பு 10 லட்சம் கோடியை தாண்டியது. அதன் விளைவாக, கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 63 பில்லியன் டாலர்களாக உயர்வடைந்துள்ளது.