கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 7 நாட்களில் 10 பில்லியன் டாலர்கள் உயர்ந்துள்ளது. இதன் விளைவாக, ப்ளூம்பர்க் நிறுவனத்தின் உலக பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி 16 வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
ஹிண்டன்பர்க் அறிக்கை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், அதானி குழும பங்குகள் தொடர் உயர்வை சந்தித்து வருகின்றன. கடந்த வாரத்தில் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 83000 கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. எனவே, தற்போதைய நிலையில், அவரது நிகர சொத்து மதிப்பு 5.83 லட்சம் கோடி, அதாவது 70.3 பில்லியன் டாலர்களாக உள்ளது. எனவே, கௌதம் அதானி 16 ஆம் இடத்துக்கு முன்னேறி உள்ளார். ப்ளூம்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில், 90.4 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி 13 ஆம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.