காஸா புதைகுழியாக மாறும் - ஹமாஸ் எச்சரிக்கை

November 1, 2023

காஸா புதைகுழியாக மாறும் என இஸ்ரேலுக்கு ஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையே 24 நாட்களாக கடுமையான மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் ஹமாஸ் ஆயுத குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தங்களின் பிடியில் இருக்கும் வெளிநாட்டவர் சிலரை இன்னும் சில நாட்களில் விடுவிக்க உள்ளதாக கூறி இருக்கிறது. தற்போது இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அவர்களுக்கு காஸா மரணகுழியாக மாறும் என ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மத்தியஸ்தர்களிடம் […]

காஸா புதைகுழியாக மாறும் என இஸ்ரேலுக்கு ஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே 24 நாட்களாக கடுமையான மோதல் நடந்து வருகிறது. இந்நிலையில் ஹமாஸ் ஆயுத குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தங்களின் பிடியில் இருக்கும் வெளிநாட்டவர் சிலரை இன்னும் சில நாட்களில் விடுவிக்க உள்ளதாக கூறி இருக்கிறது. தற்போது இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அவர்களுக்கு காஸா மரணகுழியாக மாறும் என ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து மத்தியஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அதன் பின்பு வெளிநாட்டவர் சிலரை விடுதலை செய்ய முடிவு செய்தோம். இஸ்ரேல் ராணுவ படைக்கும் மற்றும் அதன் அரசியல் தலைவர்களுக்கும் காஸா மயான பூமி ஆக மாறும் என்று அல்காசம் பிரிவின் செய்தி தொடர்பாளர் அபுதா கூறியுள்ளார்.

தற்போது ஹமாஸ் பிடியில் சுமார் 2040 பிணை கைதிகள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுவரை ஐந்து பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளனர். காஸாவில் உள்ள அகதிகள் முகாமில் பெரியதானது ஜபாலியா முகாம். இங்கு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது இதில் 50-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அந்த தாக்குதலில் இரண்டு இஸ்ரேல் ராணுவ வீரர்களும் பலியாகினர். தற்போது இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஏமன் நாடும் இணைந்துள்ளது. சிலி, பொலிவியா போன்ற நாடுகள் தங்கள் தூதர்களை திரும்ப பெற்றுக் கொண்டனர். இந்த போரினால் நாடுகள் அணி சேர ஆரம்பித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu