சர்வதேச தேவை சரிவு - சூரத் வைர ஏற்றுமதி கடும் வீழ்ச்சி

August 11, 2023

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், சர்வதேச அளவில் வைரம் மற்றும் இரத்தின கற்களுக்கான தேவை வெகுவாக குறைந்துள்ளது. இதன் விளைவாக, சூரத் நகரில் இருந்து ஏற்றுமதி ஆகும் வைரத்தின் மதிப்பு கடும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த காலாண்டில், ஒட்டுமொத்த வைரம், ஆபரணம் மற்றும் ரத்தின கற்கள் ஏற்றுமதி 60222.1 கோடி ரூபாய் மதிப்பில் பதிவாகியுள்ளது. இதுவே, முந்தைய ஆண்டில் 77499.44 கோடியாக இருந்தது. எனவே, வருடாந்திர அடிப்படையில் 28.08% வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. […]

கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், சர்வதேச அளவில் வைரம் மற்றும் இரத்தின கற்களுக்கான தேவை வெகுவாக குறைந்துள்ளது. இதன் விளைவாக, சூரத் நகரில் இருந்து ஏற்றுமதி ஆகும் வைரத்தின் மதிப்பு கடும் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

கடந்த காலாண்டில், ஒட்டுமொத்த வைரம், ஆபரணம் மற்றும் ரத்தின கற்கள் ஏற்றுமதி 60222.1 கோடி ரூபாய் மதிப்பில் பதிவாகியுள்ளது. இதுவே, முந்தைய ஆண்டில் 77499.44 கோடியாக இருந்தது. எனவே, வருடாந்திர அடிப்படையில் 28.08% வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, சூரத் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் இயங்கும் வைர நிறுவனங்களின் ஏற்றுமதி மதிப்பு 65% சரிந்து, 3173 கோடி அளவில் பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டில் 9064 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. வைரம் மற்றும் ஆபரண ஏற்றுமதி உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக வெகுவாக பாதிப்படைந்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu