ஜெர்மனி: சீனாவின் ஹூவாய், ZTE சாதனங்களுக்கு தடை

March 8, 2023

சீனாவை சேர்ந்த ஹூவாய் மற்றும் ZTE நிறுவனங்கள், தொலைதொடர்பு சாதனங்களை தயாரித்து வருகின்றன. இவை 5ஜி இணைய சேவைகளில் முக்கிய பங்காற்றுவதாக உள்ளன. இந்நிலையில், பாதுகாப்பு கருதி, இந்த நிறுவனங்களின் தொழில்நுட்ப கருவிகள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்த ஜெர்மனி தடை விதிக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜெர்மனி அரசாங்க அதிகாரிகள் கலந்தாய்வு செய்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. சீனாவைச் சேர்ந்த ஹூவாய் மற்றும் ZTE நிறுவனங்களின் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் […]

சீனாவை சேர்ந்த ஹூவாய் மற்றும் ZTE நிறுவனங்கள், தொலைதொடர்பு சாதனங்களை தயாரித்து வருகின்றன. இவை 5ஜி இணைய சேவைகளில் முக்கிய பங்காற்றுவதாக உள்ளன. இந்நிலையில், பாதுகாப்பு கருதி, இந்த நிறுவனங்களின் தொழில்நுட்ப கருவிகள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களை பயன்படுத்த ஜெர்மனி தடை விதிக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக ஜெர்மனி அரசாங்க அதிகாரிகள் கலந்தாய்வு செய்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த ஹூவாய் மற்றும் ZTE நிறுவனங்களின் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று ஜெர்மனி அதிகாரிகள் கருதுகின்றனர். ஜெர்மனி மட்டுமல்லாது, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளும் ஹுவாய் நிறுவனத்தின் சாதனங்களை தடை செய்ய பரிசீலித்து வருவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu