ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அனந்த்நாக் - ரஜோரி தொகுதியில் குலாம் நபி ஆசாத் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பின் தனி கட்சியை தொடங்கினார். அவர் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அனந்தனாக் - ரஜோரி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கட்சி சார்பில் போட்டியிட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏன் என்பதற்கான காரணங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இவருக்கு பதிலாக சலீம் பரே போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.














