2023ல் உலகளாவிய தகவல் தொழில்நுட்பச் செலவு 5.1 சதவீதம் அதிகரிக்கும்

October 21, 2022

சமீபத்திய அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் உலகளாவிய தகவல் தொழில்நுட்பச் செலவு 4.6 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.   இது 2022 ஆம் ஆண்டிலிருந்து 5.1 சதவீதம் அதிகமாகும். தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு மத்தியில் டிஜிட்டல் வணிக முயற்சிகளுடன் முன்னேற போராடுகின்றன. ஆகவே 2023 ஆம் ஆண்டில் ITக்கான நிதித்தேவை வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது வணிகத்தை இயக்கும் தொழில்நுட்பங்கள் மூலம் தொழில்நுட்ப வளர்ச்சி விகிதங்கள் பராமரிக்கப்படும் என்று […]

சமீபத்திய அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் உலகளாவிய தகவல் தொழில்நுட்பச் செலவு 4.6 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.   இது 2022 ஆம் ஆண்டிலிருந்து 5.1 சதவீதம் அதிகமாகும்.

தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு மத்தியில் டிஜிட்டல் வணிக முயற்சிகளுடன் முன்னேற போராடுகின்றன. ஆகவே 2023 ஆம் ஆண்டில் ITக்கான நிதித்தேவை வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது வணிகத்தை இயக்கும் தொழில்நுட்பங்கள் மூலம் தொழில்நுட்ப வளர்ச்சி விகிதங்கள் பராமரிக்கப்படும் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தரவு மையங்களை பராமரிக்க தரவு மைய சந்தைகளிடம்  போதுமான நிதி உள்ளது. இ௫ப்பினும் புதிதாக கிளவுட் விருப்பங்களுக்கு மாறுவது தொடர்கிறது. எனவே 2023 ஆம் ஆண்டில் மென்பொருளுக்கான செலவுகள் 11.3 சதவீத உய௫ம் என அவ்வறிக்கை வெளிப்படுத்தியது.

இது குறித்து VP ஆய்வாளர் ஜான்-டேவிட் லவ்லாக் கூறியதாவது, நிறுவனமானது,  IT வரவு செலவுகளைக் குறைப்பதற்குப் பதிலாக, டிஜிட்டல் வணிக முயற்சிகளுக்கான செலவுகளை அதிகரித்து வருவதால் இத்தகைய மந்த நிலை நிலவுகிறது என ௯றியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu