கூகிள் பே மூலமாக உலக அளவில் பணம் செலுத்தும் வசதி விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
கூகுள் இந்தியா டிஜிட்டல் சேவை மற்றும் என்.பி.சி இன்டர்நேஷனல் பேமென்ட் லிமிடெட் இடையே ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் கூகுள் பே மூலம் வெளிநாடுகளில் யூபிஐ பேமென்ட் மேற்கொள்ளும் வசதி, உலக நாடுகளில் யுபிஐ பேமென்ட் முறையை கட்டமைப்பது, உலக நாடுகளில் பணம் அனுப்பும் நடைமுறை எளிதாக்குவது என்ற நோக்கத்தை முன்வைத்து இந்த ஒப்பதம் இறுதிச் செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் பொழுது பணத்தை செலுத்துவதை எளிமையாகவும், பாதுகாப்பாகவும், பயனர்களுக்கு வசதியான முறையில் மேற்கொள்ளும் வகையிலும் இது அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.














