தெலுங்கானா: கோதாவரி விரைவு ரயில் தடம் புரண்டது - பயணிகள் தப்பித்தனர்

February 15, 2023

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது, கோதாவரி விரைவு ரயில் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக, பிபி நகர் பகுதியில், தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த ரயில் தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தெலுங்கானா வழித்தடத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வழித்தடத்தில் செல்லும் பல ரயில்கள், புவனகிரி, பிபி நகர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இன்று நடந்த இந்த விபத்தில், கோதாவரி விரைவு ரயிலின் […]

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது, கோதாவரி விரைவு ரயில் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக, பிபி நகர் பகுதியில், தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த ரயில் தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தெலுங்கானா வழித்தடத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த வழித்தடத்தில் செல்லும் பல ரயில்கள், புவனகிரி, பிபி நகர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இன்று நடந்த இந்த விபத்தில், கோதாவரி விரைவு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், நல்வாய்ப்பாக, பயணிகள் அனைவரும் காயமின்றி நலமுடன் இருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக, ரயில்வே துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், மீட்பு பணிகளில் துரிதமாக ஈடுபட்டு வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu