சென்னையில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.560 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று (நவ.29) தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களாக தங்கம் விலை குறைந்திருந்த நிலையில், தற்போது விலை உயர்ந்துள்ளது.இந்த நிலையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7,160-க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.57,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், வெள்ளியின் விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது.