ட்விட்டரில் ப்ளூ, க்ரே மற்றும் தங்க நிற டிக்குகள் வழங்க எலான் மஸ்க் முடிவு

November 26, 2022

ட்விட்டரில் ப்ளூடிக் அம்சம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், அதனை டிசம்பர் 2 ம் தேதி, மீண்டும் கொண்டு திட்டமிட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ட்விட்டரில், இது குறித்த பதிவில், இந்த அம்சம் கொண்டுவரப்படுவதில் தாமதம் ஏற்பட்டதற்கு அவர் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். அத்துடன், பல்வேறு வண்ணங்களில் இந்த அம்சத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். குறிப்பாக, நிறுவனங்களுக்கு தங்க நிற (கோல்ட்) டிக் மார்க்கும், அரசாங்க கணக்குகளுக்கு சாம்பல் நிற (க்ரே) டிக்கும், தனிநபர்களுக்கு ப்ளூ […]

ட்விட்டரில் ப்ளூடிக் அம்சம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், அதனை டிசம்பர் 2 ம் தேதி, மீண்டும் கொண்டு திட்டமிட்டுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ட்விட்டரில், இது குறித்த பதிவில், இந்த அம்சம் கொண்டுவரப்படுவதில் தாமதம் ஏற்பட்டதற்கு அவர் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

அத்துடன், பல்வேறு வண்ணங்களில் இந்த அம்சத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். குறிப்பாக, நிறுவனங்களுக்கு தங்க நிற (கோல்ட்) டிக் மார்க்கும், அரசாங்க கணக்குகளுக்கு சாம்பல் நிற (க்ரே) டிக்கும், தனிநபர்களுக்கு ப்ளூ டிக்கும் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், கட்டணம் செலுத்தும் அனைத்து தனிநபர் கணக்குகளுக்கும் ப்ளூ டிக் வழங்கப்படும் எனவும், அவர்கள் ஏதாவது நிறுவனத்துடன் தங்களை அடையாளப்படுத்தினால், கூடுதலாக சிறிய லோகோ காட்சிப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu