தென் அமெரிக்கா நாடான சுரிநேம் நாட்டில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் பத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று சுரிநேம் இந்த நாட்டில் தெற்கு மாகாணத்தில் ஒரு கிராம பகுதியில் சட்டவிரோதமாக தோண்டப்பட்ட தங் deக சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த தகவல் அறிந்து மீட்பு படை குழுவினர் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்துக்கான காரணம் தற்போது தெரியவில்லை. எனினும் காவல்துறையினர் மற்றும் ராணுவ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அந்த கிராமப் பகுதியில் உள்ள சிலர்தான் தங்கம் எடுப்பதற்காக இதை சட்டவிரோதமாக தோன்டி உள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த நாட்டில் தங்க சுரங்கம் அமைக்க அமெரிக்கா மற்றும் கனடா நாட்டு நிறுவனங்கள் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளன. கடந்த சில வருடங்களாகவே சுரங்கும் தோன்டும் பணி அதிகரித்த வண்ணம் உள்ளது.














