தங்கம் விலை உயர்வு: பொதுமக்கள் அதிர்ச்சி

September 16, 2025

சென்னையில் தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள், புதிய உச்சத்தை எட்டியுள்ளன. சென்னையில் தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்த தங்கம் விலை, வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். கடந்த வாரம் விலை உயர்ந்த நிலையில், இந்த வாரம் தங்கம் விலை சற்று குறைந்தது. ஒரு சவரன் தங்கம் ரூ.81,680-க்கு விற்பனையானது. ஆனால், இன்று மீண்டும் […]

சென்னையில் தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள், புதிய உச்சத்தை எட்டியுள்ளன.

சென்னையில் தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்த தங்கம் விலை, வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த வாரம் விலை உயர்ந்த நிலையில், இந்த வாரம் தங்கம் விலை சற்று குறைந்தது. ஒரு சவரன் தங்கம் ரூ.81,680-க்கு விற்பனையானது. ஆனால், இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.82,240-க்கு விற்கப்படுகிறது. இதேபோல, வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.144 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,44,000 ஆகவும் விற்பனையாகிறது. இந்த தொடர் விலை உயர்வு பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu