தங்கம் விலை 52000 ஐ எட்டுகிறது

April 1, 2024

ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. விரைவில் ஒரு பவுன் தங்கம் 52000 ரூபாயை எட்டும் சூழல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு 680 உயர்ந்து, 51640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 85 ரூபாய் உயர்ந்து 6455 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி 60 பைசா உயர்ந்து 81.6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாக, தங்கத்தாலான ஆபரணங்களின் […]

ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை புதிய உச்சங்களை தொட்டு வருகிறது. விரைவில் ஒரு பவுன் தங்கம் 52000 ரூபாயை எட்டும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு 680 உயர்ந்து, 51640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 85 ரூபாய் உயர்ந்து 6455 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி 60 பைசா உயர்ந்து 81.6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாக, தங்கத்தாலான ஆபரணங்களின் விலையில் செய்கூலி, சேதாரம், சரக்கு மற்றும் சேவை வரி உள்ளிட்டவை கூடுதலாக சேர்க்கப்படும். அதன்படி, இன்றைய நிலவரப்படி, ஒரு சவரன் நகை 53000 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. இதனால் சாமானிய மக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu