தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.55 உயர்ந்து ரூ.9,130 ஆக, ஒரு சவரன் ரூ.440 உயர்ந்து ரூ.73,040 ஆக விற்பனை செய்யப்படுகிறது
முந்தைய நாட்களில் சிறிது குறைந்திருந்த தங்கம் விலை, மே 5-ம் தேதி முதல் மீண்டும் உயர்வு காணத் தொடங்கியது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு கிராம் தங்கம் ரூ.9,100 என்றும், ஒரு சவரன் ரூ.72,800 என்றும் விற்பனை செய்யப்பட்டது. அதன் பிறகு விலை சற்று குறைந்த நிலையில் நேற்று ஒரு கிராம் ரூ.9,075 மற்றும் ஒரு சவரன் ரூ.72,600 ஆக விற்பனையடைந்தது. இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.55 உயர்ந்து ரூ.9,130 ஆக, ஒரு சவரன் ரூ.440 உயர்ந்து ரூ.73,040 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதே நேரத்தில், வெள்ளி விலை லேசாக குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து ரூ.110 ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,000 குறைந்து ரூ.1,10,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.