கூகுள் நிறுவனம், இணைய வழித் தேடலில் மிகப்பெரிய ஆதிக்கத்தை செலுத்துகிறது. இதன் மூலம், மற்ற போட்டி நிறுவனங்களுக்கான வாய்ப்புகளை கூகுள் பறித்துள்ளதாக அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. அமெரிக்க அரசு சார்பில் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.கைப்பேசிகளில், கூகுள் நிறுவனத்தின் வலைதள தேடல் வசதி முன்கூட்டியே பதிவிறக்கம் செய்து வழங்கப்பட்டது. இதனால், மற்ற நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் பறிபோனது. இதை முன்னிறுத்தி, அமெரிக்க அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கில், தனது ஆதிக்கத்தை நீட்டிக்கும் விதமாக, ஆண்டுக்கு 10 பில்லியன் டாலர்களை ஆப்பிள் போன்ற நிறுவனங்களுக்கு கூகுள் நிறுவனம் செலுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை அடுத்த 10 வாரங்களுக்கு இது நடைபெறும் என கூறப்படுகிறது. மேலும், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.














