கூகுள் மெசேஜஸ் பார்ட் இணைப்பு - குறுஞ்செய்திகளை கூகுள் கண்காணிக்கிறது

January 31, 2024

கூகுள் நிறுவனம் கூகுள் மெசேஜஸ் என்ற குறுஞ்செய்தி செயலியை நடத்தி வருகிறது. தற்போது, இந்த செயலியுடன் கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான பார்ட் இணைக்கப்படுகிறது. தற்போதைய நிலையில், பீட்டா பரிசோதனையில் இந்த இணைப்பு நடவடிக்கைகள் உள்ளன. அதன்படி, கூகுள் மெசேஜஸ் செயலியில் உள்ள குறுஞ்செய்திகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் கண்காணிக்கப்படுகிறது. அதாவது, தனி நபர் ஒருவர் அனுப்பும் குறுஞ்செய்திகள் அனைத்தும் கண்காணிக்கப்படுகின்றன. அண்மையில் பயனர்களின் செயல்பாடுகளை கண்காணித்ததற்காக கூகுள் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதாவது இன்காக்னிட்டோ […]

கூகுள் நிறுவனம் கூகுள் மெசேஜஸ் என்ற குறுஞ்செய்தி செயலியை நடத்தி வருகிறது. தற்போது, இந்த செயலியுடன் கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமான பார்ட் இணைக்கப்படுகிறது. தற்போதைய நிலையில், பீட்டா பரிசோதனையில் இந்த இணைப்பு நடவடிக்கைகள் உள்ளன. அதன்படி, கூகுள் மெசேஜஸ் செயலியில் உள்ள குறுஞ்செய்திகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் கண்காணிக்கப்படுகிறது. அதாவது, தனி நபர் ஒருவர் அனுப்பும் குறுஞ்செய்திகள் அனைத்தும் கண்காணிக்கப்படுகின்றன.

அண்மையில் பயனர்களின் செயல்பாடுகளை கண்காணித்ததற்காக கூகுள் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதாவது இன்காக்னிட்டோ பக்கத்தில் உள்ள விவரங்கள் கண்காணிக்கப்படாது என கூகுள் தெரிவித்திருந்த நிலையில், அந்தப் பக்கத்தில் இருந்த தகவல்களும் சேகரிக்கப்பட்டதாக அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது, குறுஞ்செய்தி செயலியில் தனிநபர் ஒருவர் யாருடன் எவ்வாறு உரையாடல் நிகழ்த்துகிறார், அந்த இரண்டாம் நபருடைய செயல்பாடுகள் என்ன, இருவருக்கிடையிலான உறவு, வார்த்தைகள் பயன்பாடு போன்ற பலவும் கண்காணிக்கப்படுகிறது. கூகுள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு தனிநபர் உரிமைகளை மீறுவது போல உள்ளதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu