கூகுள் தனியுரிமைக் கொள்கைகள் மாற்றம் - இணைய பதிவுகள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு கருவியின் மேம்பாட்டுக்கே

July 5, 2023

செயற்கை நுண்ணறிவு கருவிகள் உருவாக்கத்தில் அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் பணியாற்றி வருகின்றன. குறிப்பாக, சாட்ஜிபிடி வருகைக்குப் பிறகு இந்த போட்டி அதிகரித்துள்ளது. இந்நிலையில், கூகுள் நிறுவனம் தனது தனி உரிமைக் கொள்கைகளில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி, ‘இணையத்தில் பதிவிடும் அனைத்து தகவல்களும் செயற்கை நுண்ணறிவு கருவிகளின் திறனை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும்’ என கூறப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களின் இணைய பதிவுகள் மீது கவனம் செலுத்துமாறு பல்வேறு தரப்பினர் எச்சரித்துள்ளனர். முன்னதாக, கூகுள் நிறுவனத்தின் தனி […]

செயற்கை நுண்ணறிவு கருவிகள் உருவாக்கத்தில் அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் பணியாற்றி வருகின்றன. குறிப்பாக, சாட்ஜிபிடி வருகைக்குப் பிறகு இந்த போட்டி அதிகரித்துள்ளது. இந்நிலையில், கூகுள் நிறுவனம் தனது தனி உரிமைக் கொள்கைகளில் புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி, ‘இணையத்தில் பதிவிடும் அனைத்து தகவல்களும் செயற்கை நுண்ணறிவு கருவிகளின் திறனை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும்’ என கூறப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களின் இணைய பதிவுகள் மீது கவனம் செலுத்துமாறு பல்வேறு தரப்பினர் எச்சரித்துள்ளனர்.

முன்னதாக, கூகுள் நிறுவனத்தின் தனி உரிமைக் கொள்கைகளில், “பயனர்களின் தேடல்கள் மற்றும் பதிவுகள், லாங்குவேஜ் மாடல் கருவியை உருவாக்க பயன்படுத்தப்படும்” என்ற வாக்கியம் இடம் பெற்றிருந்தது. தற்போது, அதில், ‘லாங்குவேஜ் மாடல்’ என்பதற்கு பதிலாக, ‘செயற்கை நுண்ணறிவு மாடல்’ என கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu